ஐ.பி.எல்.2025: சென்னை வந்தடைந்த பெங்களூரு அணியினர்

1 day ago 3

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இதில் வருகிற 28-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் இன்று சென்னை வந்துடைந்தனர். 

Touchdown ➡ Chennai!Always exciting to play at Chepauk, and here we come for the big game! #PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/XmdHO3W31V

— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 24, 2025
Read Entire Article