
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி மற்றும் விலை ஆகியவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 19-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ரூ.1700 முதல் ரூ.7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.