ஐ.நா. சபையில் இந்தியா, நிரந்தர உறுப்பு நாடாக ரஷியா ஆதரவு

1 month ago 23

லண்டன்,

ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள 10 நாடுகள், 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

சர்வதேச அளவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், சீனா இதற்கு உடன்படவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த கருத்தை ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வலியுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் பேசும்போது,

சந்தேகத்திற்கு இடமின்றி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலகளாவிய தெற்கின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பிரேசில் மற்றும் இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும் அதே நேரத்தில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளையும் ஆதரிக்கிறோம் என்றார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article