
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.). தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஆஸ்திரேலியாவின் ஜெப் அலார்டிஸ் சில மாதங்களுக்கு முன்பு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். இந்த நிலையில் புதிய செயல் அதிகாரியாக இந்தியாவின் சஞ்ஜோக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சோக் குப்தா தற்போது ஜியோஸ்டாரில் விளையாட்டு மற்றும் நேரடி அனுபவங்கள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார். சஞ்ஜோக், ஐ.சி.சி.யின் 7-வது தலைமை செயல் அதிகாரி ஆவார்.