ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் உலகக்கோப்பை: உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா

6 hours ago 2

லாகூர்,

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை சந்தித்தது.

இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 120 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் தொடர்களான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட இலக்கு இதுவாகும். இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 345 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. ஆஸ்திரேலியா - 356 ரன்கள் - சாம்பியன்ஸ் டிராபி 2025

2. பாகிஸ்தான் - 345 ரன்கள் - ஒருநாள் உலகக்கோப்பை 2023

3. அயர்லாந்து - 329 ரன்கள் - ஒருநாள் உலகக்கோப்பை 2011

4. வங்காளதேசம் - 322 ரன்கள் - ஒருநாள் உலகக்கோப்பை 2015

4. இலங்கை - 322 ரன்கள் - சாம்பியன்ஸ் டிராபி 2017

Australia produce yet another superlative performance at an ICC event #ChampionsTrophy #AUSvENG ✍️: https://t.co/uDPhy4j3XI pic.twitter.com/QOIASxYcuC

— ICC (@ICC) February 22, 2025
Read Entire Article