ஐ.எஸ்.எல்.தொடர்; சென்னை - ஐதராபாத் இடையிலான ஆட்டம் 'டிரா'

3 months ago 35

ஐதராபாத்,

இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - சென்னையின் எப்.சி அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர்.

ஆனால் 2ம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என சமனில் முடிந்தது. இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article