கொச்சி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர் - ஒடிசா எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து 1-0 என ஒடிசா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல்கள் அடித்தன. இதன் காரணமாக ஆட்டம் 2-2 என சமனுக்கு வந்தது.
இந்நிலையில், ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேரளா அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.