ஐ.எஸ்.எல். கால்பந்து அரையிறுதி: கோவா - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

21 hours ago 2

கோவா,

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் தற்போது அரையிறுதி சுற்று நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று நடக்கும் முதலாவது அரையிறுதியின் 2-வது சுற்றில் எப்.சி. கோவா- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.

இதன் முதலாவது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் 'டிரா' செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். அதே நேரத்தில் கோவா அணி குறைந்தது 3 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும். ஒரு வேளை வழக்கமான நேரம் முடிவில், இரு ஆட்டத்தின் கோல் எண்ணிக்கையில் சமநிலை நீடித்தால் கூடுதல் நேரம் வழங்கப்படும். அதிலும் சமநிலை தொடர்ந்தால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்படும்.

ஐ.எஸ்.எல். போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களூரு 8 ஆட்டத்திலும், கோவா 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Read Entire Article