ஏழைகளுக்கான நீதி, சமத்துவத்தை வலியுறுத்தி வெள்ளை டி சர்ட் இயக்கம்: ராகுல் காந்தி அறிவிப்பு

3 hours ago 2

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி வெள்ளை டி சர்ட் அணியும் இயக்கத்தை தொடங்கியுள்ளார். ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் பேசுகையில், ஏழைகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்திற்கு முதுகை திரும்பி காண்பித்து வரும் மோடி தலைமையிலான பாஜ அரசு ஒரு சில முதலாளிகளுக்காக மட்டுமே வேலை செய்கிறது. சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

தொழிலாளர்களின் நிலை மோசமாக இருக்கிறது. அவர்களுக்கு நீதி, உரிமைகளுக்கு குரல் எழுப்புவது நம்முடைய கடமை. இந்த நோக்கத்தில் வெள்ளை டி சர்ட் இயக்கம் தொடங்கப்படுகிறது. இளைஞர்கள், தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் சேர விரும்புபவர்களுக்காக ஒயிட்டிசர்ட்.இன் இணையதளத்தையும் காங்கிரஸ் துவக்கியுள்ளது.

The post ஏழைகளுக்கான நீதி, சமத்துவத்தை வலியுறுத்தி வெள்ளை டி சர்ட் இயக்கம்: ராகுல் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article