ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

1 week ago 3

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தஹொமா பகுதியில் தஹொ ஏரி உள்ளது. இந்த ஏரியில் இன்று படகில் 10 பேர் பயணம் மேற்கொண்டனர்.

மாலை 3 மணியளவில் பயணம் மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக மோசமான வானிலை, பலத்த காற்றால் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

படகு விபத்தில் தண்ணீர் மூழ்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட 2 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, உயிரிழந்த 6 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article