
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!
நீங்கள் தர்ம நெறிகளை மீறி யார் நடந்து கொண்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் தட்டிக் கேட்க முற்படுவீர்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்கள் காலதாமதம் இன்றி பணிக்கு செல்ல பழகுங்கள். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சினைகள் நேரலாம். சோம்பேறித்தனத்தை தகர்த்தெறியுங்கள்.
ஜவுளி தொழில் செய்யும் பெண்களுக்கு வெளியூரிலிருந்து இறக்குமதி செய்து அதில் நல்ல ஒரு லாபத்தை பெறுவீர்கள். மற்ற தொழில்களை புரிபவர்களுக்கும் நல்ல லாபம் கிட்டும்.
குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் மகள் மற்றும் மகனது திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட துவங்குவீர்கள். பணம் தேவைக்கு ஏற்ப வந்து சேரும்.
மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. உடலில் அசதி ஏற்பட்டு விலகும்.
பரிகாரம்
சிவபெருமானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!
எழுத்தாற்றல் மிக்கவரான உங்களுக்கு, கற்பனை வளமும் மிகுதியாகவே அமைந்திருக்கும். திரை வசனகர்த்தா பாடலாசிரியர், பத்திரிகை ஆசிரியர் போன்ற துறைகள் ஏதேனும் ஒன்றில் புகழ் பெறுவதற்கான வாய்ப்புகள் கைகூடும்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலையை சரிவர செய்து தங்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பையும் பாராட்டையும் பெறுவீர்கள்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரே சமயத்தில் இரு வேறு தொழிலில் கவனம் செலுத்தி லாபத்தை அதிகரிக்க பாடுபடுவீர்கள். அதன்படி நல்ல லாபமும் கிட்டும்.
குடும்பத் தலைவிகளுக்கு கையில் பணம் புழங்கும். ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க துவங்குவீர்கள். தம்பதிகளிடையே அன்னியோன்யம் கூடும்.
மாணவ மாணவியருக்கு மந்த நிலை மாறும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்
அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே!
உங்களுக்கு ஒரு சில நண்பர்களே இருந்தாலும் அவர்களிடம் உண்மையுடன் பழகுபவர் நீங்கள். அவர்களின் வாழ்க்கையில் யாராலும் தங்கள் நட்பை பிரிக்க முடியாது.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு புதிய வண்டி வாகனத்தை வாங்குவீர்கள். இதன் மூலம் வேலைக்கு செல்லும் நேரம் குறைவாகும்.
சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு உங்கள் தொழிலில் அதிக ஆர்வத்தை காட்டி அதிக லாபத்தை பெறுவீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கை எடுத்து கணவரின் பாராட்டை பெறுவீர்கள்.
மாணவ மாணவிகளுக்கு தாங்கள் நினைத்ததற்கு மேலாக மதிப்பெண்களை எடுப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்
லக்ஷ்மி நரசிம்மரை சனிக்கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
எதை நாம் விதைக்கின்றோமோ அதையே நாம் அறுவடை செய்வோம் என்பதனை கருத்தில் கொள்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு அரசு கடன் மூலம் தங்களுக்கு பிடித்த இடத்திலேயே வீடு வாங்கும் யோகம் உள்ளது. பண வரவுக்கு பஞ்சமில்லை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு இரட்டை லாபம் கிடைக்கும். உங்கள் பணி ஆட்கள் உங்களுக்கு நேர்மையாக நடப்பார்கள்.
குடும்பத் தலைவிகள், தங்கள் கணவரின் வீட்டாரை கவனிப்பதன் மூலம் அவரின் அன்பை பெறுவீர்கள். தங்கள் கணவன் தங்கள் மீது அளவு கடந்த அன்பினை கொள்வார்கள்.
மாணவ மணிகள் சுறுசுறுப்பாக படித்து நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். உடல்நலம் முன்னேற்றம் அடையும்.
பரிகாரம்
புதன்கிழமை அன்று பச்சையம்மனுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுவது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389