ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டிட திட்ட அனுமதி இணையதளம் மாற்றம்: மாநகராட்சி தகவல்

4 days ago 3

சென்னை, மார்ச் 25: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை; சென்னை மாநகராட்சியில் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் கட்டிட திட்ட ஒப்புதல் நிகழ்நிலை அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திட்ட அனுமதி விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறையில் பெற்று செயலாக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், பொதுமக்களுக்காக இந்த சேவையை மேம்படுத்த வேண்டி இந்த கட்டிட திட்ட ஒப்புதல் நிகழ்நிலையை தமிழ்நாடு ஒற்றைசாளர போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. 1.4.2025 முதல் சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்ட்டல் இணையதளம் மூலம் தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், 31.3.2025 மற்றும் அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையிலேயே ஒப்புதல் வழங்கப்படும்.

The post ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டிட திட்ட அனுமதி இணையதளம் மாற்றம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article