நாமக்கல்: ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு தப்ப முயன்ற கொள்ளையர்கள், குமாரபாளையம் அருகே நேற்று சிக்கினர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டது. வெப்படை காவல் நிலையத்தில் 5 கொள்ளையர்களிடமும் 2 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனைக்குப் பின் 5 கொள்ளையர்களையும் நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்த உள்ளது. ஆந்திரா, கேரள போலீசார் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.
மேலும், ஒடிசா போலீசாரும் ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். தேவைப்பட்டால் கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு குறைவாக உள்ள ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை முயற்சி நடைபெறுகிறது. கூகுள் மேப் மூலம் ஏடிஎம் மையங்களை அடையாளம் கண்டு கொள்ளையடித்து வருகின்றனர்.
The post ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி appeared first on Dinakaran.