
திருவள்ளூர்,
ஏ.ஆர் ரகுமானை, எல்.முருகன் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். திருவள்ளூர் அய்யர்கண்டிகையில் உள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டுடியோவில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.
அண்மையில், தமிழ் நடிகை மீனா, டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது பேசுபொருளான நிலையில், ஏ.ஆர் ரகுமானை, எல்.முருகன் சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்புக்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.