
சென்னை,
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளங்கி வருகிறார். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இன்று காலை 7.30 மணிக்கு அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார் .