திருவள்ளூர், செப். 30: சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. சென்னை அடுத்த பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில், சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு மனிதச் சங்கிலி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் சாய் சத்யவதி, கல்லூரி முதல்வர் மாலதி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் நுழைவாயிலில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 110 மாணவர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை அமைதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி மனிதச் சங்கிலியை உருவாக்கினர்.
பகையுணர்வு நீங்கிய அமைதியான உலகே இன்றைய அத்தியாவசிய தேவை என்பதை வலியுறுத்தும் வண்ணம், சக மனிதர்கள், சமுதாயம், மாநிலம், நாடு, உலகம் தழுவிய அமைதியான உலகைப் படைத்திட எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் இம்முன்னெடுப்பு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
The post எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி appeared first on Dinakaran.