எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ மாபெரும் பேச்சுப் போட்டி: சென்னையில் ஏப். 6, 7-ல் இறுதிப் போட்டி

2 weeks ago 5

சென்னை: எஸ்​.ஆர்​.எம். தமிழ்ப்​ பே​ரா​யம் சார்​பில் ‘சொல் தமிழா! சொல்! 2025’ எனும் மாநில அளவில் கல்​லூரி மாணவர்​களுக்​கான மாபெரும் பேச்​சுப் போட்​டி​யின் இறு​திப் போட்டி மற்​றும் பரிசளிப்பு விழா சென்​னை​யில் வரும் 6, 7-ம் தேதி​களில் நடை​பெறுகிறது. இந்த விழா காட்​டாங்​குளத்​தூர் எஸ்​.ஆர்​.எம். பல்​கலைக்​கழகவளாகத்​தில் உள்ள முனை​வர் தி.பொ.கணேசன் கலை​யரங்​கில் காலை 10 மணிக்கு நடை​பெறுகிறது.

தமிழகம் முழு​வதும் உள்ள கல்​லூரி மற்​றும் பல்​கலைக்​கழகங்​களில் பேச்​சுத் திறன்​மிக்க மாணவர்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களை ஊக்​குவிக்​கும் உயரிய நோக்​குடன் அனைத்து மாவட்​டங்​களும் 9 மண்​டலங்​களாகப் பிரிக்​கப்​பட்டு, பேச்​சுப் போட்​டிகள் நடை​பெற்​றன. சென்​னை, வேலூர், கடலூர், திருச்​சி, தஞ்​சாவூர், மதுரை, நெல்​லை, கோவை, சேலம் ஆகிய 9 மண்டல அளவி​லான போட்​டிகள் நடை​பெற்று முடிந்த நிலை​யில், மாநில அளவி​லான இறு​திப்போட்​டிக்​கான இரண்டு சுற்றுகள் நாளையும் (ஏப். 6), இறு​திச்​சுற்று மற்றும் பரிசளிப்பு விழா 7-ம் தேதி​யும் நடை​பெறவுள்​ளது.

Read Entire Article