மதுரை: “எவ்வளவு மழை பெய்தாலும் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கக்கூடாது,” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். தற்போது ரூ.315 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகள் மற்றும் கழிவு நீர் வெளியேற, கழிவுநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை.