டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலால் பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு கடந்த சில நாட்களாகவே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பகிஸ்தான் இந்தியாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த சூழலில் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து இந்திய நிகழ்த்தியுள்ள தாக்குதல் காரணமாக கோபமடைந்துள்ள பகிஸ்தான் இந்திய மக்களை குறிவைத்து துப்பக்கிசூடு நடத்தியுள்ளது.
குறிப்பாக குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட பல இடங்களில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பக்கிசூடு நடத்தியது. இதில் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. காலை 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்களை சேர்ந்த 10 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இதனை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் உறுதி செய்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதோடு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
The post எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு என தகவல் appeared first on Dinakaran.