எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள பயங்கரவாத தளங்கள் அழிப்பு: வீடியோ வெளியிட்டது ராணுவம்

2 hours ago 1

ஸ்ரீநகர், 

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது.

இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை குறிவைத்து அதிரடியாக பதில் தாக்குதல் தொடுத்தது.

பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது. மேலும் பீரங்கி தாக்குதலையும் அதிகரித்தது. பாகிஸ்தானும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத தளங்களை இந்தியா அழித்துள்ளது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் இந்த தாக்குதல் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்த துல்லிய தாக்குதல் தொடர்பான வீடியோவையும் ராணுவம் பகிர்ந்துள்ளது. இந்தியா தற்போது அழித்து இருக்கும் இந்த பயங்கரவாத முகாம்களில் இருந்துதான் நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகள் நடைபெற்றதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 

Read Entire Article