‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

13 hours ago 1

ராமேசுவரம்: இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27-ம் தேதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் P 475, P 481 ஆகிய கடற்படை ரோந்து படகு / கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

Read Entire Article