எல்லிஸ் பெர்ரி அதிரடி... உ.பி.வாரியர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

3 hours ago 1

பெங்களூரு,

மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து பெங்களூருவின் தொடக்க வீராங்கனைகளாக டேனியல் வயட்-ஹாட்ஜ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களம் இறங்கினர். இதில் மந்தனா 6 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து எல்லிஸ் பெர்ரி களம் கண்டார். டேனியல் வயட்-ஹாட்ஜ் மற்றும் எல்லிஸ் பெர்ரி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் டேனியல் வயட்-ஹாட்ஜ் 57 ரன்னிலும், அடுத்து வந்த ரிச்சா கோஷ் 8 ரன்னிலும், கனிகா அகுஜா 5 ரன்னிலும், ஜார்ஜியா வரேஹம் 8 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் எல்லிஸ் பெர்ரி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 90 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி.வாரியர்ஸ் அணி ஆட உள்ளது.

Read Entire Article