
சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'பாலகம்' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வேணு யெல்டாண்டி தனது இரண்டாவது படமாக எல்லம்மாவை இயக்க உள்ளார்
இப்படத்தில் ஆரம்பத்தில், நானி கதாநாயகனாக நடிப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது நிதின் நடிப்பதாக தெரிகிறது. அதேபோல், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டநிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, ரூ. 40 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் படப்பிடிப்பு மே மாத இறுதி வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.