எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் விரைவில் முதலிடம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை

1 week ago 4

சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அசோசெம் சார்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் தரவு மற்றும் கிளவுட் கட்டமைப்பில் தமிழகத்தின் பார்வை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமிழகத்தை தரவு மையங்களின் மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.டபிள்யூ.சி நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

Read Entire Article