எலக்ட்ரிக் பைக் தீயில் எரிந்து நாசம்

3 hours ago 4

புழல், மே 25: சென்னை மாதவரம் பால் பண்ணை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (30). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு தாம்பரம்-புழல் சைக்கிள் ஷாப் பைபாஸ் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். புழல் அடுத்த கதிர்வேடு மேம்பாலத்தின் மேல் சென்றபோது அவரது எலக்ட்ரிக் பைக்கில் திடீரென புகை வந்ததால் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் பைக் கொழுந்துவிட்டு தீ மளமள என எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் மாதவரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்துகொண்டிருந்த எலக்ட்ரிக் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பைக் எரிந்து சாம்பலானது.

The post எலக்ட்ரிக் பைக் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Read Entire Article