எரக்குடி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

4 weeks ago 3

 

ஜெயங்கொண்டம், டிச. 17: எரக்குடி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயண்சுத்தமல்லி ஊராட்சி, எரக்குடி கிராம மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இப்புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள். தமிழக அரசின் நலத்திட்டங்கலான, நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன், கலைஞர்கனவு இல்லம், விடியல் பயணம், குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

The post எரக்குடி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Read Entire Article