"எம்புரான்" டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!

4 hours ago 2

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது.

Character No.1 Mohanlal as KHURESHI AB'RAAM A.K.A Stephen Nedumpally in #L2E Witness his legacy in #Empuraan⚡️Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi@mohanlal @PrithviOfficial #MuraliGopy @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @antonypbvr @aashirvadcinepic.twitter.com/lJaVQRj2Ia

— Lyca Productions (@LycaProductions) February 26, 2025

நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார்.

இந்நிலையில், 'எல் 2 எம்புரான்' படத்தின் டப்பிங் பணிகயில் மஞ்சு வாரியார் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article