எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்கள்: அமைச்சர் சாமிநாதன்

5 months ago 15

சென்னை: எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்களை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் (12.12.2024) சென்னை, இராயப்பேட்டை பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் தமிழ்நாடு அரசின் ஆதரவுடன், இந்தோ சினி அப்ரிசியேசன் ஃபவுன்டேசன் சார்பில் நடைபெறும் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை (22-nd Chennai International Film Festival) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் (12.12.2024) 22-வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் ஆற்றிய உரை

இன்று தமிழ்த் திரையுலகில் சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கின்ற மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 74-வது பிறந்த நாள் காணக் கொண்டிருக்கின்ற அவருக்கும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளையும், அரசின் சார்பிலும் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்தியத் திரைப்படத் திறனாய்வு கழகத்தின் (ICAF) மூலம் சிறிய முயற்சியாக 21 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்கள். இவ்விழாவிற்கு 2008-ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் முதல் முதலாக நிதியுதவி வழங்கி, இந்த விழா நடைபெறுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார்கள்.

உலகின் சிறந்த திரைப்படங்களையும், திரைப்பட இயக்குனர்களையும் கொண்டாடும் நிகழ்வாக மாறி, தற்போது இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாக்களில் ஒன்றாக மாறியுள்ளது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழாவில் வரலாற்றிலேயே முதன் முறையாகவும், இந்திய திரைப்பட விழாக்களில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 177 திரைப்படங்களையும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன், விருது பெற்ற 40 திரைப்படங்களும் திரையிட உள்ளதற்கும் செய்தி கிடைப்பதற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் முதன்முதலாக ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்கி துவக்கி வைத்தார்கள். மேலும், 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் தலா ரூபாய் 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில், 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் தலா 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விழாவிற்கு தலா 75 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், கலைவரின் வழிவந்த திராவிட நாயகர் முதலமைச்சர் 2023ஆண்டு முதல் ரூபாய் 85 லட்சமாக உயர்த்தி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவா சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தமிழ்நாடு ஆண்டுதோறும் அரசின் சார்பில், ஆண்டுதோறும் நிதியுதவி ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முதலமைச்சர் ஆணையின்படி, 2023-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 15 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பபட்டது. திரைப்படத் துறையைப் பொறுத்த வரை திரைப்படத் துறைக்கும், அதன் தொழிலாளர்களுக்கும் கழக அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க சில திட்டங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டட நிலம் ஒதுக்கீடு செய்தார் கலைஞர்.

அந்த வகையில், திரைப்படத் துறை மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த பல்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கும் சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் படப்பிடிப்பு தளம் அமைத்திட 90 ஏக்கர் நிலம் அன்றைக்கு வழங்கப்பட்டது. இதில் முறையே பெப்சி தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 50 ஏக்கர் நிலமும், பெப்சி ஸ்டுடியோ அமைக்க 15 ஏக்கர் நிலமும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 ஏக்கர் நிலமும், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர் கூட்டமைப்புக்கு 8 ஏக்கர் நிலமும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு 7 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையினர் நலவாரியம், கலை நலன்களுக்காகவும், திரையினருக்கும் உலகத்தினரின் சின்னத் சேர்த்து “திரைப்படத் துறையினர் நலவாரியம்” ஒன்றினை புதிதாக 2009-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது கலைஞர் உருவாக்கினார். இவ்வாரியத்தில் திரைப்படத் துறை, சின்னத்திரையில் பணியாற்றும் 39 சங்கங்களை சார்ந்த சுமார் 27,000 பேர் உறுப்பினர்களாக இதுவரை பதிவு செய்துள்ளார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அதையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் கூட நான் இந்த நேரத்தில் அரசின் சார்பில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

திரைப்பட விருதுகள்

2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான கடந்த ஆட்சியாளர்களால் வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரையிலான சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பல்வேறு விருதுகளை வழங்கினோம். அதேபோல் ஆண்டுக்கான 2015ஆம் பல்வேறு திரைப்பட விருதுகளை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கினோம். மேலும், 2016 முதல் 2022ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளும், 2015-2016, 2021-2022 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் கே.பி.கே.வாசுகி அவர்களை தலைவராகக் கொண்டு தேர்வுக் குழு அமைக்கப்பட்டு விருதாளர்களை தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

சின்னத்திரை விருதுகள்

2009 முதல் 2013ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், சிறந்த நெடுந்தொடர்கள், ஆண்டின் சாதனையாளர் விருது, ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வழங்கினோம்.2014 முதல் 2022ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு சின்னத்திரை விருதுகள் வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி தலைவராகக் கொண்டு தேர்வுக் குழு அமைக்கப்பட்டு விருதாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருது 2008-2009 கல்வியாண்டு முதல் 2014-2015ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் விருதுகள் 35 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் கலைஞரின் பெயரில் வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது 2022ஆம் ஆண்டு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கும், 2023ஆம் ஆண்டு கவிஞர் மு.மேத்தாவுக்கும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றுகின்ற வகையில், சிறப்பினமாக 2023ஆம் ஆண்டிற்கு மட்டும் கூடுதலாக பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கும் முதலமைச்சரால் அந்த விருது வழங்கப்பட்டது. தென்மாநிலங்கள் தேசிய மட்டுமின்றி அளவில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய “கலைஞர்-100” விழாவின் போது முதலமைச்சர் ரூ.500 கோடி மதிப்பில் “அதிநவீன திரைப்பட நகரம்” திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே கூத்தம்பாக்கத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள். அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனுடைய வடிவமைப்பு திட்ட மதிப்பீட்டு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் துணை முதலமைச்சரும், நாங்களும் அதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். விரைவில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகு ஒப்பந்தப்புள்ளியை கோரி அந்தப் பணியை துவங்க இருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்பட நகரத்தில், வி.எப்.எக்ஸ்., அனிமேஷன் மற்றும் எல்.இ.டி சுவர் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகள், படப்பிடிப்புக்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் சுமார் ரூபாய் 5 கோடி மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்கள் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் துவங்க இருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தென்கிழக்கு ஆசியாவின் முன்னனித் திரைப்பட விழாக்களில் ஒன்றாக உயர்த்தவும், புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் திரை கலைஞர்களையும், உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களையும், திரைப்பட இயக்குனர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஈர்க்கும் வகையில் இந்நிகழ்வை மாற்ற முயற்சிக்கும் விழா குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து, சிறப்பாக இந்த சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.நன்றி! வணக்கம். இந்நிகழ்ச்சியில் இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன், இந்திய திரைப்பட திறனாய்வுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகம். துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, திரைப்பட நடிகைகள் பூர்ணிமா, குஷ்பு மற்றும் திரைப்படத் துறை கலைஞர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்புத் தளங்கள்: அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.

Read Entire Article