எமர்ஜிங் ஆசிய கோப்பை; வங்காளதேச 'ஏ' அணியை வீழ்த்தி இலங்கை 'ஏ' அபார வெற்றி

3 months ago 13

அல் அமேரத்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை 'ஏ' அணி வங்காளதேசம் 'ஏ' அணி மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து வங்காளதேசம் 'ஏ' அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை 'ஏ' அபார வெற்றிபெற்றது.

Read Entire Article