'எமகாதகி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

6 months ago 18

நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் மற்றும் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.

ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்துக்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Thrilled to reveal the first look of #Yamakaathagi— A film crafted with passion, determination, and boundless creativity. Kudos to the incredible team for bringing this vision to life with such a unique touch. Eagerly looking forward to experience the story that this first look… pic.twitter.com/1g4nTpLel5

— aishwarya rajesh (@aishu_dil) December 29, 2024
Read Entire Article