'என்னுடைய 2-வது இன்னிங்ஸ் எப்படி இருக்கும் என்பதை காட்டுவேன்' – பாலகிருஷ்ணா

3 weeks ago 8

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடிக்கிறார்.

'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கி உள்ளார். எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இதில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இப்படம் பிளாக்பஸ்டராகும் என்று பாலகிருஷ்ணா கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

' நாங்கள் எப்போதும் யாரும் முயற்சிக்காத ஒன்றை செய்ய விரும்புவோம். அப்படித்தான் இந்த கதையைத் தேர்ந்தெடுத்தோம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இந்தப் படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். எனது ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வெற்றிகளை வழங்கி எப்போதும் ஊக்கப்படுத்தினர். கண்டிப்பாக இப்படம் பிளாக்பஸ்டராகும்.

சமீபத்தில் அகண்டா 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம், அதில் எனது இரண்டாவது இன்னிங்ஸ் எப்படி இருக்கும் என்பதை காட்டுவேன்'என்றார்.

Read Entire Article