என்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் வழங்கப்படும்; பாமகவில் தனக்கே அதிகாரம் உள்ளது: ராமதாஸ் திட்டவட்டம்!

4 days ago 2

விழுப்புரம்: தன்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

என்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட்: ராமதாஸ்
தன்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் வழங்கப்படும். என்னை சந்தித்து பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாமகவில் தனக்கே அதிகாரம் உள்ளது: ராமதாஸ்
பாமகவில் தனக்கே அதிகாரம் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறினார்.

பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியது தவறு: ராமதாஸ்
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது. இந்து முன்னணி சார்பில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ ஒளிபரப்பப்பட்ட நிலையில், ராமதாஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

The post என்னுடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் வழங்கப்படும்; பாமகவில் தனக்கே அதிகாரம் உள்ளது: ராமதாஸ் திட்டவட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article