என் குடும்பத்தினர், பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் சைக்கோ போல் பதிவிடுவதா?.. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசாருக்கு ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

2 months ago 9


திருமலை: என் குடும்பத்தினர், பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் குடும்பத்தினர் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளத்தில் சைக்கோ போன்று அநாகரீகமான பதிவுகளை பதிவிடுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தள்ளாயப்பாலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளத்தில் சைக்கோ போன்று அநாகரீகமான பதிவுகளை செய்து வருகின்றனர். என் குடும்பத்தினர், பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் குடும்பத்தினர் குறித்து வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் குறித்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் எங்களை மனதளவில் புண்படுத்தும் வகையில் பதிவுகள் போடப்படுகிறது.

அதற்கு காரணமான யாரையும் விட்டு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. என்னுடன் விளையாட முயற்சிக்காதீர்கள். அப்படி செய்தால் யாரையும் விடமாட்டேன். குற்றவாளிகள் மீது பரிவு காண்பிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்றால் யார் மீது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதிவிடுவீர்களா? யாரையும் விட்டு வைக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post என் குடும்பத்தினர், பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் சைக்கோ போல் பதிவிடுவதா?.. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசாருக்கு ஆந்திர முதல்வர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article