``என் உடலை தானம் செய்கிறேன், ஆனால் இதயத்தை மட்டும் ..." - நடிகர் ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்

1 week ago 2

சென்னை,

மதுரையை சேர்ந்தவர் நடிகர் ஷிகான் ஹுசைனி. இவர் கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில்தான் அறிமுகமானார். அதுபோல் 'பத்ரி' படத்தில் விஜய்க்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக ஹுசைனி நடித்திருந்தார்.

நடிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களுக்கும் அவர் கராத்தே பயிற்சி அளித்துள்ளார். இதற்கிடையில்,  தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் நடிகர் ஹுசைனி.

இந்நிலையில், நடிகர் ஹுசைனி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர்,

``மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புகிறேன். ஆனால், இதயத்தை மட்டும் என் வில்வித்தை - கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

``என் உடலை தானம் செய்கிறேன், ஆனால் ..." - ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்#ShihanHussaini #ShihanHussainiHealth pic.twitter.com/FawIFbR06g

— Thanthi TV (@ThanthiTV) March 20, 2025
Read Entire Article