எனது மகன் என்னை கொல்லப்பார்க்கிறாரா? வதந்தி பரப்பினால் மானநஷ்ட வழக்கு: தெலுங்கு தேசம் கட்சிக்கு ஜெகன்மோகனின் தாய் எச்சரிக்கை

1 week ago 3


திருமலை: ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா வை விபத்து ஏற்படுத்தி கொல்ல முயற்சி செய்ததாக தெலுங்கு தேசம் கட்சி தனது சமூக வலை தள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட் டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள விஜயாம்மா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என இருக்காதீர்கள். எங்கள் வீட்டு சொத்து பிரச்னை, அண்ணன், தங்கை பிரச்னை இவையெல்லாம் எங்கள் குடும்ப பிரச்னை.

இதில் நீங்கள் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம். எப்போதோ நடந்த கார் விபத்தை இப்போது வைரலாக்கி வருகிறீர்கள். எனது மகன் ஜெகன்மோகனை தேவையின்றி குற்றம் சாட்டுகிறீர்கள். எனது மகன், என்னை ஏன் கொலை செய்யவேண்டும்? எனது மகன் மற்றும் மகளை சரியாகத்தான் வளர்த்துள்ளேன். அவர்கள் அரசியல் வாழ்க்கையிலும் சரி, குடும்பத்திலும் சரி நேர்மையாகத்தான் வாழ்கின்றனர். எனவே தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம். மீறினால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post எனது மகன் என்னை கொல்லப்பார்க்கிறாரா? வதந்தி பரப்பினால் மானநஷ்ட வழக்கு: தெலுங்கு தேசம் கட்சிக்கு ஜெகன்மோகனின் தாய் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article