எத்திசையும் தமிழணங்கே என்ற கருப்பொருளில் ஜன. 11, 12ம் தேதி அயலக தமிழர் தினம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

15 hours ago 2

சென்னை: நான்காவது அயலகத் தமிழர் தினம் வரும் ஜனவரி 11, 12ம் தேதி எத்திசையும் தமிழணங்கே என்ற கருப்பொருளில் நடைபெறும் என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறினார். 4வது அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்தது. இதில் அயலகத் தமிழர் தின விழாவில் கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தொழில்முனைவு, வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், மருத்துவ சுற்றுலா, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், வெளிநாட்டில் தமிழ்மொழி கற்பிப்பது மற்றும் அயல்நாடுகளில் தமிழ் ஊடகம் போன்ற தலைப்புகளின் அமர்வுகள் அமைச்சர்கள் மற்றும் அயலகத் தமிழர்கள் முன்னிலையில் நடத்தப்படும்.

மேலும் SICCI உடன் இணைந்து, பல்வேறு நாடுகளில் அங்குள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடன் இணைந்து ‘ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் விதமாக, 8 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் முறையாக, அயலகச்சூழலில் தலைசிறந்து விளங்கும் தமிழருக்கு ‘தமிழ் மாமணி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அயலகத் தமிழர் நலத்துறையின் ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் பங்கேற்பாளர்கள் ‘பண்பாட்டுத் தூதுவர்’ என்று சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ‘சிறந்த பண்பாட்டுத் தூதுவர்’ என்று விருதளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு தனிப்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://nrtamils.tn.gov.in இணையதள முகவரியை அணுகவும்.

The post எத்திசையும் தமிழணங்கே என்ற கருப்பொருளில் ஜன. 11, 12ம் தேதி அயலக தமிழர் தினம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article