புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் நேற்று முன் தினம் துவங்கியது. அப்போது அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க கோரி, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது அதானி லஞ்ச விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டு மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.