எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறி வருகிறார்: அமைச்சர் ராஜேந்திரன் விமர்சனம்

3 months ago 13

சென்னை: செய்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது; சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன. அவர் தனது தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படாமல் தொடர்ந்து முதலமைச்சர் வழியில் மக்கள் பணிகளில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறி வருகிறார்: அமைச்சர் ராஜேந்திரன் விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article