உத்தரகன்னடா: எச்.டி.குமாரசாமியை கண்டு பாஜ தலைவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் என்.எஸ்.போசராஜு தெரிவித்தார். உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகா ஷிரூரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சிறு நீர்ப்பாசனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் என்.எஸ்.போசராஜு, நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
பாஜவில் முன்பு 3 கதவுகள் இருந்தன. இப்போது 6 கதவுகள் உள்ளன. எச்.டி.குமாரசாமி 7வது வாசலில் சவாரி செய்துவிடுவார் என்ற அச்சம் பாஜ தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளராக இருந்த நிகில் குமாரசாமியை தோற்கடிக்க, பாஜ ஒத்துழைத்தது. காங்கிரஸ் அரசு பாதுகாப்பாக உள்ளது. இரவு உணவு கூட்டத்தை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை.
எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் பட்டியல் சமூகம் தொடர்பான வழக்குகள் குறித்து உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் விவாதித்தார். அந்த இடத்தில், அரசியல் மாற்றங்கள் குறித்து விவாதிக்க இரவு உணவு கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை. ஒன்றிய, மாநில அரசுகளின் 60:40 திட்டத்துக்கு, ரூ.2.5 ஆயிரம் கோடிக்கு மேல், ஒன்றிய அரசிடம் இருந்து விடுவிக்க, சிறு நீர்ப்பாசனத் துறை முன்மொழிந்தாலும், இதுவரை நிதியை வழங்கவில்லை. மாநிலத்துக்கு வர வேண்டிய மானியத்தை வழங்காமல் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது என்றார்.
The post எச்.டி.குமாரசாமியை கண்டு பாஜ தலைவர்களுக்கு பயம்: அமைச்சர் என்.எஸ்.போசராஜு கலாய் appeared first on Dinakaran.