
டுவிட்டர் என்ற பெயரில் இயங்கி வந்த சமூக வலைத்தளம், தொழில் அதிபர் எலான் மஸ்க், வாங்கிய பிறகு அதன் பெயரை 'எக்ஸ்' என்று மாற்றினார். எக்ஸ் வலைத்தளம் வந்தபிறகு பிரீமியம், பிரீமியம் பிளஸ் போன்ற சேவை கணக்குகளுக்கு தலா ரூ.650 மற்றும் ரூ.900 கட்டணம் விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்தியாவில் இந்த சேவை கட்டணம் குறைக்கப்படுவதாக எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரீமியம் கணக்கின் கட்டணம் 34 சதவீதம் குறைக்கப்பட்டு, ரூ.650-ல் இருந்து ரூ.427 ஆக வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல பிரீமியம் பிளஸ் கணக்குகளுக்கான கட்டணம் 48 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.900-ல் இருந்து ரூ.470 ஆக வசூலிக்கப்பட உள்ளது.
அடிப்படை சந்தா தற்போது ரூ.244-ல் இருந்து 30 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.170 ஆக வசூலிக்கப்பட உள்ளது.பிரீமியம் பிளஸ் சேவையில் முற்றிலும் விளம்பரங்கள் தவிர்க்கப்படும். கட்டுரை எழுத வசதி இருப்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.