ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை தேவை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ வலியுறுத்தல்

1 week ago 4

புதுடெல்லி: ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ தெரிவித்துள்ளார். மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ கலந்து கொண்டு பேசியதாவது, ‘‘சமூக வாழ்க்கையின் அடித்தளம் நம்பிக்கை தான். இது ஒற்றுமைக்கு ஆதாரம். அரசின் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைப்பதே ஆட்சிக்கு ஆதாரம்.

பொருளாதார முன்னேற்றத்துக்கு ஊழல் தடையாக இருப்பது மட்டுமின்றி சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குறைக்கிறது. இது சகோதரத்துவ உணர்வுகளை மோசமாக பாதிக்கிறது. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமை பாட்டிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது. நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஆவது நெறிமுறையற்ற நபர்களை ஊக்குவிக்கும்” என்றார்.

The post ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை தேவை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article