“ஊழல்களே பாஜக கூட்டணிக்கு ஊன்றுகோல்!” - அமித் ஷாவுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

1 week ago 5

சென்னை: “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல்கள், ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள், அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாமே நாடகம்தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பணிய வைக்கத்தான் அவை பயன்படுத்தப்பட்டன. பாஜக ஊழலை ஒழிக்கவில்லை. அந்த ஊழல் புகார்களை வைத்து கூட்டணி பேரம் இன்று வரை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது” எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா. “ஊழலை ஒழிக்கிறேன்” என ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி என்ன செய்தார்? எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே ‘ஊழல் புகார்’ என்ற கேடயத்தைப் பயன்படுத்தினார். மோடி பேசிய ‘அச்சா தின்’ (நல்ல நாள்) எல்லாம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான், அவர்களின் வளர்ச்சிக்குத்தான் ‘வளர்ச்சி’ நாயகன்’ உழைத்தார். அவையெல்லாம் முறைப்படுத்தப்பட்ட ஊழல்கள்தான்.

Read Entire Article