சென்னை: ஊரக பகுதிகளில் 1.25 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, தமிழகத்தின் பசுமை போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி கூறினார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 11-வது மாநில வேலை உறுதி மன்ற குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் இத்தகவலை தெரிவித்தார். மொத்தம் 825 வட்டார நாற்றாங்கால்களில் வளர்க்கப்பட்ட 1.25 கோடி மரக்கன்றுகள் ஊரகப்பகுதிகளில் நடப்பட்டு, தமிழகத்தின் பசுமை போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
The post ஊரக பகுதிகளில் 1.25 கோடி மரக்கன்றுகள்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.