ஊட்டியில் ஆயுதப்படை வாகனங்களை மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

3 weeks ago 8

 

ஊட்டி, டிச.25: நீலகிரி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் சார்பில் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு காவல்துறை வாகனங்களை மேற்கு மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை பிரிவு ஊட்டி தாவரவியல் பூங்காவில் ராஜ்பவன் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி, வாகன பராமரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், ஊட்டிக்கு வந்தார். பின், அவர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, காவல்துறை சார்பில் இயக்கப்படும் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் மற்றும் பைக்குகள் ஆகியவைகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

The post ஊட்டியில் ஆயுதப்படை வாகனங்களை மேற்கு மண்டல ஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article