ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தொட்டிகளில் மண் நிரப்பும் பணி

1 day ago 4

ஊட்டி: மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் மண் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் கோடை சீசனுக்காக தயார் செய்யும் பணியில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில், மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் இயற்கை உரம் கலந்த மண் நிரப்பும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆண்டுதோறும் மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகளை தரம் பிரித்து, அவைகள் அனைத்தும் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படுவது வழக்கம். கோடை சீசன் துவங்கிய நிலையில், மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள், புல் மைதானம் சீரமைக்கும் பணி என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பல ஆயிரம் தொட்டிகளில் தொடர்ந்து நடவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக இயற்கை உரம் கலந்த தொட்டிகளில் மண் நிரப்பு பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த தொட்டிகளில் மலர்கள் பூக்கும் காலத்தை பொறுத்து நாற்று நடவு செய்யும் பணிகள் துவக்கப்படவுள்ளது.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தொட்டிகளில் மண் நிரப்பும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article