ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தவில்லை: ஐகோர்ட் அதிருப்தி

1 month ago 7

சென்னை: வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலாபயணிகளுக்கு இ-பாஸ் வழங்ககூடிய முறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த இரண்டு மலைவாச ஸ்தலங்களுக்கும் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு, அந்த பகுதிகளின் கொள்ளவு குறித்து தெரிந்துகொள்ளவும், சுற்றுலாபயணிகள் சிரமமின்றி சென்று வரவும் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இந்த இ-பாஸ் வழங்குவதற்கு முன்னதாக வாகனங்களில் வருபவர்களிடம் வாகனத்தின் வகை, எத்தனை நபர்கள் வருகிறார்கள், சுற்றுலா திட்டமிட்டுள்ள நாட்கள் போன்ற விவரங்களை பெறவேண்டும் என இரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சதீஸ்குமார்; கடந்த ஒரு வாரமாக பார்ப்பதாகவும், ஊட்டி கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் நடைமுறை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்ற அதிருப்தியை தெரிவித்தனர். இ-பாஸ் தொடர்பாக எந்த வித சோதனையும் நடத்தப்படவில்லை என கூறிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காதிதத்தில் மட்டுமே உள்ளது என கண்டனத்தை பதிவு செய்தனர்.

The post ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை முறையாக அமல்படுத்தவில்லை: ஐகோர்ட் அதிருப்தி appeared first on Dinakaran.

Read Entire Article