சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளி்ன் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதி்த்து உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை, உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மலை வாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.