ஊட்டி அருகே கல்லக்கொரை கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

1 day ago 3

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது. சில சமயம் பொது மக்களையும் தாக்கி அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் கடந்த 3 மாதத்துக்கு முன் வீட்டின் மாடியில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது. இதை தொடர்ந்து வீட்டு உரிமையாளர் வீட்டை சுற்றி வேலி அமைத்து கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளார். அந்த கேமராவில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சிறுத்தை அந்த வீட்டில் உள்ள கம்பி வேலி அருகே நின்று வளர்ப்பு பிராணிகள் இருக்கிறதா என நோட்டமிடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

நாள் தோறும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இச்சாலை வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் இக்கிராமத்தை தாண்டி கரிகல்வலை கிராமத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது. பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். நடத்துச் செல்லும் பொது மக்கள் சிறுத்தை உலாவும் இந்த சிசிடிவி.காட்சிகளை கண்டு பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் மீண்டும் நடமாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊட்டி அருகே கல்லக்கொரை கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article