ஊட்டி அரசு கலை கல்லூரியில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

4 hours ago 2

 

ஊட்டி, மே 10: ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் இராமலட்சுமி கூறியிருப்பதாவது: ஊட்டி அரசு கலை கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம், பொருளியல், வரலாறு, சுற்றுலாத்துறை, பயண மேலாண்மை, ஆங்கில இலக்கியம், பாதுகாப்பியல், இளம் அறிவியல் கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வன விலங்கு உயிரியியல், மின்னணுவியல், புவியியல், இளம் வணிகவியல் கணினி பயன்பாடுகள், பன்னாட்டு வணிகம், பிஎஸ்சி, பிகாம் என 18 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.

2025-2026ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு ஊட்டி அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உதவி மையத்தை அணுகி பயனடையலாம். உதவி மையத்தை 0423-2443981 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post ஊட்டி அரசு கலை கல்லூரியில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article