'ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம்': 2-வது கட்ட தொகுப்பை தொடங்கிவைத்தார் மு.க.ஸ்டாலின்

6 months ago 22

அரியலூர்,

பள்ளிக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் பொருட்டு, ரூ.22 கோடியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2வது தொகுப்பை அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் வாரணாசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கிருந்த உணவு பொருட்கள் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். அப்போது மகளிரால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களை அவர் சுவைத்து அது குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர் அங்கிருந்த அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்த முதல் அமைச்சர், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினையும் வழங்கினார்

இந்த திட்டத்தின் முதலாம் கட்ட பயனாளிகள், இத்திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர். மேடையில் பேசிய தாய்மார்களின் குழந்தைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன், சிவசங்கர், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆர்.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Read Entire Article